இந்தியாவுக்கு AWACS விமானங்களை தர யாரும் முன்வராத நிலை !!

  • Tamil Defense
  • January 23, 2023
  • Comments Off on இந்தியாவுக்கு AWACS விமானங்களை தர யாரும் முன்வராத நிலை !!

இந்திய விமானப்படைக்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேத்ரா NETRA AWACS – Airborne Warning & Control System எனப்படும் தொலைதூர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை விமானங்களின் டெலிவரி காலதாமதம் ஆகி வரும் நிலையில்

அதை சமாளிக்க உலகளாவிய ரீதியில் AWACS விமானங்களை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில் இதுவரை எந்த நாடும் இதில் ஆர்வம் காட்டவில்லை இதற்கு காரணம் இந்திய விமானப்படையின் நிபந்தனைகளுக்கு ஏற்ற விமானங்கள் பெருமளவில் இல்லை.

பெரும்பாலான விமானங்கள் 1970 காலகட்ட தொழில்நுட்பம் கொண்டவை இவற்றை இந்திய விமானப்படை விரும்பவில்லை, அதே நேரத்தில் Boeing போயிங் நிறுவனத்தின் அதிநவீன E – 767 மற்றும் 737 E-7 போன்ற விமானங்கள் குத்தகைக்கு அளிக்கப்படாது.

இதற்கிடையே இந்தியா இரண்டு இஸ்ரேலிய Phalcon AWACS Mk2 ரக ரேடார்கள் பொருத்தப்பட்ட ரஷ்ய IL – 76 ரக விமானங்களை வாங்க விரும்பிய நிலையில் விமானத்திற்கான விலையும், ரேடார் பொருத்துவதற்கான விலையும் அதிகமாக இருந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

Embraer நிறுவனத்தின் இரண்டு ERJ 145 விமானங்களில் நேத்ரா மார்க் -1 ரேடார்களை பொருத்தி பயன்படுத்த திட்டமிட்ட நிலையில் சில தொழில்நுட்ப திறன் சார்ந்த சந்தேகங்களால் அதுவும் கைவிடப்பட்டது.

தற்போது DRDO ஆறு முன்னாள் Air India A-321 ரக விமானங்களை மாற்றியமைத்து NETRA Mk2 ரக ரேடார்களை பொருத்தி வருகிறது இந்த பணிகள் நிறைவடைய ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம், அதுவரை இந்தியா மூன்று ஐ.எல்-76 ஃபால்கன் ஏவாக்ஸ் விமானங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.