இந்திய கடற்படைக்கு புதிய அதிவேக வாட்டர் ஜெட் கலன்கள் !!

  • Tamil Defense
  • January 11, 2023
  • Comments Off on இந்திய கடற்படைக்கு புதிய அதிவேக வாட்டர் ஜெட் கலன்கள் !!

இந்திய கடற்படை 21 NWJFAC New Water Jet Fast Attack Crafts எனப்படும் புதிய அதிவேக வாட்டர் ஜெட் கலன்களை வாங்க விரும்புகிறது ஆகவே இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கான விருப்ப அறிவிக்கை கோரிக்கையை RFI Request For Information வெளியிட்டு உள்ளது.

ஆர்வமுள்ள இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்ளலாம் 2026 -2030 வரையிலான நான்கு ஆண்டு காலகட்டத்தில் இவை படிப்படியாக கட்டமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கலன்கள் கடலோர பாதுகாப்பு, கடற்படை தள பாதுகாப்பு, துறைமுக பாதுகாப்பு, கடல்சார் வர்த்தக பாதுகாப்பு, அதிவேக ரோந்து மற்றும் இடைமறிப்பு போன்ற பணிகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.

இதை தவிர கடற்கொள்ளை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கும் இந்த வகை கலன்கள் பயன்படுத்தி கொள்ளப்படும் வகையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.