ஜாகுவார் போர் விமான என்ஜினுக்கான முக்கிய பாகங்கள் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிப்பு !!
1 min read

ஜாகுவார் போர் விமான என்ஜினுக்கான முக்கிய பாகங்கள் வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிப்பு !!

மிதானி MIDHANI – Mishra Dhatu Nigam எனப்படும் இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமான என்ஜின்களுக்கான முக்கிய பாகங்களை வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

இந்த விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் Adour Mk 102 ஆடோர் ரக என்ஜின்களுக்கான இந்த பாகங்கள் ஏற்கனவே இருந்த ஒரிஜினல் பாகங்களை விடவும் மிகவும் தரம் வாய்ந்தவையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படை ஜாகுவார் விமானங்களின் ஆயுளை அதிகரிக்கும் திட்டத்தை HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்துடன் இணைந்து தொடங்கிய போது ஒரு மிகப்பெரிய தடங்கல் ஏற்பட்டது.

அதாவது இந்த விமானங்கள் மற்றும் அவற்றிற்கான என்ஜின்களை தயாரிக்கும் இங்கிலாந்து மேற்குறிப்பிட்டவற்றை தற்போது பயன்படுத்தாத காரணத்தால் அவற்றின் உதிரி பாக தயாரிப்பு பணிகளை நிறுத்தியது.

இதனையடுத்து இந்திய விமானப்படை மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் ஆகியவை கூட்டாக மிதானி நிறுவனத்தை அணுகியதை அடுத்து வெற்றிகரமாக இந்த பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.