அடுத்த ஆண்டில் சுதேசி பயிற்சி விமானத்தின் தயாரிப்பு பணிகள் ஆரம்பம் !!
1 min read

அடுத்த ஆண்டில் சுதேசி பயிற்சி விமானத்தின் தயாரிப்பு பணிகள் ஆரம்பம் !!

மஹாரஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள HAL Hindustan Aeronautics Limited நிறுவனத்தின் தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு முதல் சுதேசி பயிற்சி விமானத்தின் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளன.

முதல் இரண்டு விமானங்கள் 2024-2025 வாக்கில் டெலிவரி செய்யப்படும், அடுத்தபடியாக 2025-2026 வாக்கில் எட்டு விமானங்கள் டெலிவரி செய்யப்படும் அதன்பிறகு ஆண்டுக்கு 21 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் 106 விமானங்கள் வாங்க ஒப்புதல் அளித்த நிலையில் முதல்கட்டமாக 70 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்த பிறகு மீதமுள்ள 36 விமானங்கள் டெலிவரி செய்யப்படும், 2025-2026 வாக்கில் மேலும் 20 விமானங்கள் கூடுதலாக ஆர்டர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.