ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பு குழுவை வெளியேற்றிய இந்தியா !!

  • Tamil Defense
  • January 25, 2023
  • Comments Off on ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பு குழுவை வெளியேற்றிய இந்தியா !!

1948ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பாகிஸ்தான் போருக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லையை கண்காணிக்க ஒரு ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் 40 உறுப்பினர்கள் உள்ளனர், இத்தனை ஆண்டுகளாக இந்த குழுவினரின் உணவு, இருப்பிடம், போக்குவரத்து, உள்ளிட்ட பல்வேறு செலவுகளை மொத்தமாக இந்திய அரசு தான் கவனித்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இரு தரப்பு பிரச்சினை அல்ல மாறாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான முத்தரப்பு பிரச்சினை எனவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா மற்றும் பாகிஸ்தான் செய்து வரும் பணிகளை இந்தியா தடுத்து வருவதாகவும்

மேலும் தங்களுக்கு இந்தியா அளித்து வரும் நிதி உதவியானது போதுமானதாக இல்லை ஆகவே நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என விமர்சனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில் இந்தியா இதனை தீவிரமாக எடுத்து கொண்டது.

தொடர்ந்து இந்திய அரசு உடனடியாக செயல்பட்டு அனைத்து உறுப்பினர்களின் விசாக்களையும் ரத்து செய்து அனைவரும் இந்தியாவை விட்டு 10 நாட்களுக்கு உள்ளாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பு குழுவுக்கு எதிரான இந்தியாவின் இந்த காட்டமான செயல்பாடு உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் மிகையல்ல.