1 min read
காலாட்படை வீரர்களுடன் இணைந்து செயல்படும் ரோபோக்களை தயாரிக்கும் இந்தியா !!
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான DRDO Defence Research and Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ரோபோக்களை உருவாக்கி வருகிறது.
அதாவது போர் களத்தில் உள்ள வீரர்களுடன் இணைந்து அவர்களுக்கு துணையாக இவை செயல்படும் எனவும் இவற்றின் பணி வீரர்களின் உடல் ரீதியான கஷ்டத்தை போக்குவது எனவும்
அந்த வகையில் வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள், அவற்றிற்கான தோட்டாக்கள், குண்டுகள், உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை சுமந்து செல்லும் எனவும்
அதே போல் சண்டையில் காயமடையும் வீரர்களை சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் வகையிலும் அனைத்து நில பரப்பிலும் செயல்படும் வகையிலும், வீரர்களின் உத்தரவுக்கு கட்டுபடும் வகையிலும் இவை உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.