14,000 கோடி மதிப்பிலான கடற்படை போர் விமான திட்டம் தயார் !!
இந்திய கடற்படைக்கு ADA Aeronautical Development Agency எனப்படும் வானூர்தி மேம்பாட்டு முகமை இந்திய கடற்படையுடன் இணைந்து வடிவமைத்த இரட்டை என்ஜின் கடற்படை போர் விமானத்தின் வடிவமைப்பு சீராய்வு விரைவில் நடைபெற உள்ளதாகவும்
உடனடியாக அந்த சோதனை அறிக்கை இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்பித்து இந்த TEDBF இரட்டை என்ஜின் கடற்படை விமான தயாரிப்பு திட்டத்திற்கான 14,000 கோடி ரூபாய் நிதி ஆதாரத்தை பெற தீவிரமாக முயற்சி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படை தன்னிடம் உள்ள 45 Mig – 29K போர் விமானங்களை வருகிற 2034ஆம் ஆண்டு முதல் 2040 வரையிலான ஆறு ஆண்டு காலகட்டத்திற்குள் படையில் இருந்து விலக்கி 2031 முதல் TEDBF போர் விமானங்களை படையில் இணைக்க திட்டமிட்டு உள்ளது.
2031 ஆம் ஆண்டு இரட்டை என்ஜின் கடற்படை போர் விமானத்தின் தயாரிப்பு பணிகள் துவங்கும் என கூறப்படும் நிலையில் இந்திய கடற்படை இத்தகைய 60 போர் விமானங்களை வாங்குவதாக உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.