
ஜனவரி 15 அன்று பெங்களூர் நகரத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் என்ஜினியரிங் க்ரூப் மையத்தில் நடைபெற்ற தரைப்படை தின விழாவில் சிறப்பு விருந்தினராக தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்திய தரைப்படையின் பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும்
அந்த வகையில் பல பழைய படையணிகள் கலைக்கப்பட்டும் அல்லது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வருவதாகவும்
இதன மூலம் ஒருங்கிணைந்த படைப்பிரிவுகளை உருவாக்குவது எளிதாகும் காரணம் ஒட்டுமொத்த படையும் சிறப்பான செயல்திறனை கொண்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.