மேம்படுத்தப்படும் இந்திய C-17 ராணுவ போக்குவரத்து விமானங்கள் !!
இந்தியா தனது முதல் முன்று Boeing C-17 Globemaster 3 ரக விமானங்களை பத்து ஆண்டுகள் முன்னர் படையில் இணைத்த நிலையில் தற்போது அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டமிடல் துவங்கி உள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் நிலையில் இது உறுதியானால் மென்பொருள் மற்றும் பல்வேறு பாகங்கள் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இது தவிர இந்த விமானங்களில் இருந்து வீரர்கள் பாராசூட் மூலமாக குதிக்கும் வசதி மேம்படுத்தப்படும் எனவும் அனைத்து விமானங்களிலும் செயற்கைகோள் தகவல் தொடர்பு திறன் மேம்படுத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படை இத்தகைய 11 விமானங்களை 24000 கோடிக்கும் அதிகமான பணம் கொடுத்து வாங்கக கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித பிரச்சனையும் இன்றி பயன்படுத்தி வருகிறது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.