இந்தியா Fighter Launched Kamikaze Drones எனப்படும் தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்களை வடிவமைத்து உருவாக்கி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
போர் விமானிகள் தங்களது விமானத்தில் இருந்து ஆளில்லா விமானங்களை கட்டுபடுத்தும் CATS Combat Air Teaming System எனப்படும் அமைப்பின் முதல் படைப்பாக மேற்குறிப்பிட்ட ட்ரோன்கள் இருக்கும்.
இவற்றை ALFA – S Air Launched Flexible Asset System என அழைக்கின்றனர், போர் விமானங்களில் ஒரு பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும் அதில் இத்தகைய நான்கு ட்ரோன்கள் இருக்கும்.
இவற்றை ஏவும் பட்சத்தில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவு வரை காற்றிலேயே மிதந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும், இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஏவிய பிறகும் விமானியால் இவற்றை கட்டுபடுத்த முடியும் என்பதாகும்.
விமானங்களில் இருந்து ஏவப்படும் இந்த தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்கள் அடுத்த ஆண்டு அதாவது 2024ல் சோதனை செய்யப்படும் எனவும் அதே நேரத்தில் தரையில் மற்றும் வாகனங்களில் இருந்து ஏவப்படும் ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.