Financial Express நாளிதழ் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒரு லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை சோதனை செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதாவது இந்த அமைப்பின் பெயர் துர்கா DURGA Directionally Unrestricted Ray Gun Array ஆகும், இதன் திறன் 100 Kilowatt கிலோவாட் ஆகும், இது மிகவும் அருகில் வரும் ராக்கெட், மோர்ட்டார், ட்ரோன்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
இது குறுந்தூர ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மாற்று அல்ல மாறாக அவற்றுடன் இணைந்து செயல்பட வடிவமைக்கப்பட்டவை ஆகும் அதே நேரத்தில் பெரிய தொலைதூர இலக்குகளை சக்திவாய்ந்த ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புகள் கவனித்து கொள்ளும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே DRDO 25 கிலோவாட் திறன் கொண்ட லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை சோதனை செய்த நிலையில் இந்த DURGA லேசர் வான் பாதுகாப்பு அமைப்பு முழு வடிவம் பெறுவதற்கு ஏறத்தாழ 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.