நான்கு புதிய வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்க உள்ள இந்தியா !!
ஏற்கனவே DRDO Defence Research & Development Organisation உள்நாட்டிலேயே சொந்தமாக உருவாக்கிய NASM Naval Anti Ship Missile எனப்படும் ஏவுகணையின் நான்கு புதிய ரகங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நான்கு ஏவுகணைகளும் NASM – MR Naval Anti Ship Missile Medium Range எனப்படும் நடுத்தர தூரம் செல்லும் ஏவுகணையை அடிப்படையாக கொண்டவையாகும் ஆனால் இந்த நான்கு ஏவுகணைகளின் ஏவுதளங்கள் மற்றும் முறைகள் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முதலாவதாக வானூர்திகளில் அதாவது கடற்படை போர் விமானங்கள், கனரக ஹெலிகாப்டர்கள் மற்றும் தொலைதூர கண்காணிப்பு/ரோந்து விமானங்களில் இருந்து ஏவப்படும் வகையிலான NASM – MR ஏவுகணை உருவாக்கப்படும்.
அடுத்தபடியாக முன்னனி போர் கப்பல்கள் அதாவது நாசகாரிகள், கார்வெட்கள், ஃப்ரிகேட்கள் போன்ற கப்பல்களில் இருந்து ஏவப்படும் திட எரிபொருள் என்ஜின் கொண்ட ஏவுகணை ஒன்று உருவாக்கப்படும் இதன் தாக்குதல் வரம்பு 350 கிலோமீட்டர் ஆகும்.
மூன்றாவதாக நீர்மூழ்கி கப்பல்களில் குறிப்பாக அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் வகையிலான திட எரிபொருள் என்ஜின் கொண்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை உருவாக்கப்படும், இதன் தாக்குதல் வரம்பு 100 கிலோமீட்டர் தான் என கூறப்படுகிறது.
கடைசியாக கடற்கரை பகுதிகளில் நிலைநிறுத்தப்படும் கடலோர பாதுகாப்பு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது இதை உருவாக்க அதிக காலம் பிடிக்கும் ஆனால் உருவாக்கி விட்டால் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புகளும் உண்டு என்பது இதன் சிறப்பம்சம் என்றால் மிகையாகாது.