இந்திய கடற்படை ஆளில்லா தாக்குதல் படகுகளை வாங்குவதற்கான ஆர்டரை Sagar Defence Engineering Pvt Ltd சாகர் டிஃபன்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆளில்லா தாக்குதல் படகுகள் குழுவாகவும் இணைந்து செயல்படும் திறன் கொண்டவையாக இருக்கும் இவை இந்திய கடற்படைக்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்க்கும் என்றால் மிகையல்ல.
காரணம் இவற்றை கொண்டு கடற்படை தளங்களின் பாதுகாப்பு, கடலோர மற்றும் ஆழ்கடல் கண்காணிப்பு, இடைமறிப்பு, ரோந்து, தேடுதல் மற்றும் மீட்பு போன்ற பல்வேறு வகையான பணிகளை மேற்கொள்ள முடியும் ஆகவே பெரிய படகுகள் மற்றும் கப்பல்களின் பயன்பாடு குறையும் அவற்றை வேறு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.
முதற்கட்டமாக இந்திய கடற்படை இத்தகைய 12 ஆளில்லா தாக்குதல் படகுகளை வாங்க உள்ளது களத்தில் பயன்படுத்திய அனுபவத்தின் அடிப்படையில் அதிக அளவில் ஆர்டர் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த படகுகளில் எந்தெந்த ஆயுத அமைப்புகள் இருக்கும் என தெரியவில்லை ஆனால் கனரக அல்லது இலகுரக இயந்திர துப்பாக்கிகள், சிறிய ரக ஏவுகணைகள் அல்லது ராக்கெட்டுகள் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவது கூடுதல் தகவல் ஆகும்.