இஸ்ரேலிய ரிமோட் கன்ட்ரோல் ஆயுதத்தில் நாட்டம் காட்டும் இந்தியா !!

  • Tamil Defense
  • January 19, 2023
  • Comments Off on இஸ்ரேலிய ரிமோட் கன்ட்ரோல் ஆயுதத்தில் நாட்டம் காட்டும் இந்தியா !!

இஸ்ரேலை சேர்ந்த General Robotics ஜெனரல் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் Pitbull RCWS – Remote Controlled Weapon Station எனப்படும் ரிமோட் மூலமாக இயங்கக்கூடிய ஆயுத அமைப்பில் இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷாஹார் கால் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பில் 7.62 அல்லது 12.7 மில்லிமீட்டர் ரக இயந்திர துப்பாக்கி மற்றும் 40 மில்லிமீட்டர் பார்வை கருவி ஆகியவற்றை பொருத்தி கொள்ள முடியும் இது ஒர் இலகுரக ஆயுதமாகும் தற்போது இந்திய தரைப்படை மற்றும் கடற்படை ஆகியவை தங்களது ஆர்வத்தை வெளிபடுத்தி உள்ளன.

உலகில் பல்வேறு RCWS அமைப்புகள் இருக்கையில் இதற்கு பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன, குறிப்பாக ட்ரோன் எதிர்ப்பு திறன் மற்றும் சுய சிந்தனை திறன் ஆகியவை இதில் உண்டு.

ஆகவே இந்த அமைப்பு சில சமயங்களில் தானாகவே தாக்குதல் நடத்தும் அதே நேரத்தில் தேவைப்பட்டால் இந்த அம்சத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு நாமே முழு கட்டுபாட்டை எடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.