
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் QRSAM – Quick Reaction Surface to Air Missile அதாவது அதிவிரைவு வான் பாதுகாப்பு அமைப்பிற்கான ஏவுகணைகளை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்க DRDO எதிர்நோக்கி உள்ளது.
பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அடுத்து தயாரிப்பு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அனுமதி கிடைத்த ஆறு மாத காலத்திற்குள் தயாரிப்பு பணிகள் துவங்கும் எனவும் DRDOவின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் சாஹூ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒடிசா மாநிலம் சண்டிப்பூர் சோதனை தளத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட ஏவுகணையை ஆறு முறை இந்திய தரைப்படை மற்றும் DRDO இணைந்து வெற்றிகரமாக சோதனை செய்ததும்
இந்திய தரைப்படைக்கு தனது கவச வாகன படைப்பிரிவுகள் மற்றும் படையணிகளை எதிரிகளின் வான் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மேற்குறிப்பிட்ட ஏவுகணைகள் தேவை என கூறப்படுகிறது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட வான் பாதுகாப்பு அமைப்பிற்கான ரேடார்கள் மிகவும் அருகே தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்களை அடையாளம் காண்பதில் தோல்வி அடைந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.