1 min read
வாகனம் சார்ந்த ட்ரோன் ஜாம்மர் வாங்க திட்டம் !!
இந்திய தரைப்படை வாகனத்தில் பொருத்தப்பட்ட ட்ரோன் ஜாம்மர்களை வாங்குவதற்கு RFI – Request For Information எனப்படும் தகவல் கோரிக்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பானது தனியாக மற்றும் குழுவாக இயங்கும் ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை செயலிழக்க செய்ய வேண்டியது அவசியமாகும்.
மேலும் அனைத்து சென்சார்களை ஒருங்கிணைத்து கண்காணித்து கள சூழல் பற்றிய தகவல்களை இயக்குபவருக்கு தெரிவிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
பல்வேறு வகையான அலைவரிசைகளை பயன்படுத்தி இலக்குகளை கண்டுபிடித்து அதே போல் அவற்றை செயலிழக்க செய்யும் திறனும் வேண்டும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.