ஜப்பானில் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்தும் இந்தியா !!

  • Tamil Defense
  • January 4, 2023
  • Comments Off on ஜப்பானில் தனது ஆயுதங்களை காட்சிப்படுத்தும் இந்தியா !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய பாதுகாப்பு துறை தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஜப்பானில் இந்திய ஆயுதங்களை காட்சிப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் ட்ரோன்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், கண்ணிவெடி எதிர்ப்பு அமைப்புகள், துப்பாக்கிகள், குண்டு துளைக்கா உடைகள், தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை காட்சிபடுத்த இந்திய தரைப்படை விரும்புகிறது.

ஆகவே தற்போது இந்திய தரைப்படை மேற்குறிப்பிட்ட ஆயுதங்கள் மற்றும் இதர கருவிகள் மற்றும் அமைப்புகளை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஆர்வமிருந்தால் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.