காரணம் என்ன ?  ராணுவத்தை குறைக்க மத்திய அரசு திட்டம் !!
1 min read

காரணம் என்ன ? ராணுவத்தை குறைக்க மத்திய அரசு திட்டம் !!

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு தற்போது மீண்டும் காஷ்மீர் சார்ந்த பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குவிக்கப்பட்டு இருக்கும் ராணுவ வீரர்களை அதாவது ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையினரின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும்

அவர்களுக்கு பதிலாக துணை ராணுவ படைகளின் எண்ணிக்கையை காஷ்மீரில் அதிகரிக்கும் வகையில் அவர்களை குவிக்க உள்ளதாகவும் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படைகுறைப்பு நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆறு ஆண்டு காலத்திற்கு நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு சில கட்ட படைகுறைப்பு நடவடிக்கைகள் நடைபெறும் எனவும், சில மாதங்களிலேயே குறிப்பிட்ட அளவுக்கு ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும

அதே நேரத்தில் ஒரேடியாக ராணுவம் முழுமையாக காஷ்மீரில் இருந்து விலக்கி கொள்ளப்படாது தொடர்ந்து ராணுவம் காஷ்மீரில் எதிர்காலத்திலும் கூட நிலை கொண்டு இருக்கும் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே உள்துறை அமைச்சக தகவல்களின்படி அடுத்த சில வாரங்களில் காஷ்மீர் பிராந்திய மாவட்டங்களான கந்தர்பால் மற்றும் பட்காமில் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்களின் எண்ணிக்கை முதல்கட்டமாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் படிப்படியாக இரண்டு மாவட்டங்களையும் CRPF தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளும் எனவும் தெரிவிக்கின்றன.