மீண்டும் 100 வஜ்ரா பிரங்கிகளை வாங்கும் பணிகளை துவங்கிய தரைப்படை !!

இந்திய தரைப்படை ஏற்கனவே 100 K-9 VAJRA கே-9 வஜ்ரா தானியங்கி பிரங்கிகளை பயன்படுத்தி வரும் நிலையில் மீண்டும் இத்தகைய 100 பிரங்கிகளை வாங்க விரும்பி திட்டமிட்டு இருந்தது.

தற்போது அதற்கான பணிகளை இந்திய தரைப்படை துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, மேலும் இந்த 100 பிரங்கிகளை லடாக்கில் களம் இறக்க உள்ளதால். வீரர்களுக்கான குளிர் தாங்கும் வசதிகளுடன் தயாரிக்கப்பட உள்ளன.

இதனையடுத்து இவற்றை இந்தியாவில் தயாரிக்கும் Larsen & Toubro நிறுவனம் குளிர்கால அமைப்புகளுக்கான தொழில்நுட்பத்தை தருமாறு தென் கொரியாவின் Hanwha Defense ஹான்வாஹா நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த இரண்டாம் தொகுதி பிரங்கிகளை அதிக உயரத்தில் அதிக குளிரில் குறிப்பாக மைனஸ் தட்பவெப்ப நிலைக்கு கீழான சூழலிலும் கூட தங்கு தடையின்றி செயல்படும் வகையில் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கூடுதலாக வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் இந்திய எல்லைகளிலேயே மிகவும் சிக்கலான பலவீனமான நிலப்பரப்பான சிக்கன் காரிடார் பகுதியிலும் மேலும் 100 வஜ்ரா பிரங்கிகளை வாங்கி களமிக்க இந்திய தரைப்படை விரும்புகிறது குறிப்பிடத்தக்கது ஆகும்.