இந்தியா உருவாக்கிய புதிய மல்டிகாப்டர் ட்ரோன் !!

இந்தியாவின் DRDO Defence Research & Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒரு புதிய மல்டிகாப்டர் (Multicopter) ட்ரோன் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதை அதிக உயர பகுதிகளில் குறிப்பாக மலை பிரதேசங்களில் மற்றும் கடுமையான தட்பவெப்ப நிலை நிலவும் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ள முடியும் என DRDO விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் ஐயான் பேட்டரி கடுமையான குளிரிலும் கூட செயலிழக்காமல் சக்தி அளிக்கும் இந்த பேட்டரி தொடர்ந்து 30 நிமிடம் பறப்பதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும் இந்த ட்ரோனில் செல்ல வேண்டிய இடம் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்தால் தானாகவே அங்கு சென்று திரும்பி வரும் எனவும் இதனால் 5 கிலோ எடையை சுமந்து கொண்டு 14,000 அடி உயரத்தில் பறந்து செல்லும் எனவும் கூறப்படுகிறது.

இந்த சுமை ஏதேனும் கண்காணிப்பு பணி மேற்கொள்வதற்கான சென்சாராக இருக்கலாம் எனவும் அல்லது எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான குண்டுகளாகவும் இருக்கலாம் எனவும் DRDO தற்போது இதை விட அதிக எடையை (25-30 கிலோ) சுமக்க கூடிய அதிக உயரத்தில் பறக்க கூடிய அதிக நேரம் பறக்க கூடிய பெரிய மல்டிகாப்டர் ட்ரோனை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.