கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டருக்கான கண்காணிப்பு ரேடார் தயாரிப்பு !!

  • Tamil Defense
  • January 10, 2023
  • Comments Off on கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டருக்கான கண்காணிப்பு ரேடார் தயாரிப்பு !!

LUH Light Utility Helicopter எனப்படும் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டரின் கடற்படை வடிவமான Naval LUH ஹெலிகாப்டருக்கான கண்காணிப்பு ரேடார் தயாரிக்கப்பட்டுள்ளது.

HAL Hindustan Aeronuatics Limited நிறுவனம் இனி LUH ரக ஹெலிகாப்டர்களில் கடற்படைக்கு தேவையான சில மாற்றங்களை செய்ய உள்ளது குறிப்பாக போர் கப்பல்களில் இருந்து இயங்கும் வகையிலான மாற்றங்களை செய்ய உள்ளது.

இப்படி கடற்படை இலகுரக ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்ட பிறகு இந்த புதிய கண்காணிப்பு ரேடார் அதில் இணைக்கப்படும் இந்த ரேடார் தொலைதூர தேடுதல் மற்றும் மீட்பு, தொலைதூர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொள்ள பேரூதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடற்படை இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களில் சக்கரங்கள் இருக்கும் மேலும் விசிறிகளை மடக்கி வைக்க முடியும் அடுத்த சில மாதங்களில் இவற்றின் சோதனைகள் துவங்க உள்ளன.

தற்போதைய கடற்படை இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் இலகுவாக இருக்கும் மேலும் இவற்றை இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை பயன்படுத்தி கொள்ள முடியும் ஆனால் வருங்காலத்தில் இவற்றை விட சற்றே பெரிய கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர் தயாரிக்கப்படும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.