47 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • January 13, 2023
  • Comments Off on 47 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை முதல்முறையாக ஜப்பானிய மண்ணில் அந்நாட்டு விமானப்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சி மேற்கொள்ள உள்ளது ஜப்பான் தலைநகர் டோக்யோ அருகேயுள்ள ஹயாகுரி விமானப்படை தளத்தில் இந்த பயிற்சிகள் நடைபெற உள்ளன.

இந்திய விமானப்படை சார்பில் சுகோய்-30 Su-30 MKI ரக போர் விமானங்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றன, ஜப்பானிய விமானப்படையின் சார்பில் Mitsubishi F-2 ( ஜப்பானிய F-16) கலந்து கொள்ள உள்ளது.

இந்த நிலையில் இந்திய போர் விமானங்கள் ஜப்பான் சென்றடைந்தது அங்கு பலத்த எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வத்தை ஜப்பான் விமானப்படை வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் இடையே ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் 47 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் விமானப்படை விமானி லெஃப்டினன்ட். விக்டர் பெலன்கோ தனது மிக்-25 Mig-25 போர் விமானத்துடன் ஜப்பானில் தரை இறங்கி அடைக்கலம் கோரினார், அப்போது இந்த நிகழ்வு ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்று அமெரிக்காவின் SR-71 தொலைதூர கண்காணிப்பு விமானம் உலகின் மிகச்சிறந்த வேகமான கண்காணிப்பு விமானமாக இருந்த நிலையில் அதை இடைமறிக்கும் ஆற்றல் Mig-25 விமானத்திற்கு மட்டுமே இருந்தது ஆகவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் ஜப்பானும் அந்த விமானத்தை ஆய்வு செய்வதில் பெருத்த ஆர்வம் காட்டின விமானமும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜப்பானிய விமானப்படை இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானங்களை அனுப்பி வைக்குமாறு விரும்பி கேட்டு கொண்டதாகவும் இதற்கு காரணம் சீனாவின் வலிமை குறைந்த சுகோய் விமானங்களுடன் மோதும் நிலை ஏற்ப்பட்டால் அதை கையாள்வது எப்படி என கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என எண்ணியதே ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.