இந்த ஆண்டின் 3ஆவது ஏவுகணை சோதனை அறிவிப்பை வெளியிட்ட இந்தியா !!

இந்தியா இந்த ஆண்டில் நடைபெற உள்ள மூன்றாவது ஏவுகணை சோதனைக்கான பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிக்கையை வெளியிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து வங்க கடலுக்குள் தென் கிழக்கே வருகிற 12 – 14 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது.

இந்த சோதனை சுமார் 650 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியில் நடத்தப்பட உள்ளது ஆகவே இது நிர்பய் NIRBHAY க்ரூஸ் ஏவுகணையாக இருக்கலாம் என கருதப்படுகிறது கடந்த முறை Manik மாணிக் என்ஜினுடன் சோதனை செய்த போது தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.