புதிய ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • January 11, 2023
  • Comments Off on புதிய ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கும் இந்தியா !!

அடுத்த மாதம் பெங்களூர் ஏலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள Aero India 2023 ஏரோ இந்தியா வானூர்தி கண்காட்சியில் இந்தியா தனது ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானத்தை பற்றிய பல தகவல்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மேற்குறிப்பிட்ட ஆளில்லா ஸ்டெல்த் போர் விமானத்தை இந்திய தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கி வருகின்றன, இதன் அனைத்து பாகங்களும் அமைப்புகளும் கருவிகளும் மென்பொருட்களும் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக இருக்கும்.

மேலும் இது இந்திய விமானப்படையின் லட்சிய திட்டமான CATS Combat Air Teaming System அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என கூறப்படுகிறது, ஆளில்லா அமைப்புகள் மூலமாக சிறப்பாக செயலாற்ற முடியும் என இந்திய விமானப்படை நம்புகிறது ஆகவே தான் சமீப காலமாக இத்தகைய திட்டங்களில் அதிக நாட்டம் காட்டி வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.