இந்தியாவுடன் இணைந்து ராணுவ போக்குவரத்து விமானம் தயாரிக்க தென் கொரியா திட்டம் ??

  • Tamil Defense
  • January 21, 2023
  • Comments Off on இந்தியாவுடன் இணைந்து ராணுவ போக்குவரத்து விமானம் தயாரிக்க தென் கொரியா திட்டம் ??

சமீபத்தில் தென்கொரியா நாட்டில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் அந்நாட்டின் KAI Korean Aerospace Industries நிறுவனம் தனது MC – X ராணுவ போக்குவரத்து விமானத்தை அறிமுகம் செய்தது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் தென் கொரிய விமானப்படைக்கு இந்த வகை விமானங்கள் எத்தனை தேவைப்படும் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் மேலும் கூட்டு தயாரிப்பில் ஆர்வமுள்ள நாடுகளை கன்டறிந்து வருவதாகவும் கூறினார்.

அந்த வகையில் இந்த விமானம் ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, இந்தியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஆர்வமிருந்தால் ஆஃபர் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த விமானம் C – 130 J Super Hercules மற்றும் Airbus A-400M விமானங்களுக்கு இடைபட்டது மேலும் இது ஏற்கனவே இந்திய விமானப்படைக்கு ஆஃபர் செய்யப்பட்டுள்ள Embraer C-390 விமானத்திற்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட MC-X விமானமானது தற்போது வடிவமைப்பு நிலையில் உள்ள காரணத்தால் இந்திய தரப்பிடம் இது சார்ந்த முன்மொழிவை தென் கொரிய தரப்பு தெரிவிக்கவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.