ராணுவம் சார்ந்த லித்தியம் ஐயான் பேட்டரி தயாரிக்க இணைந்த இந்தியா மற்றும் ஜப்பான் !!

  • Tamil Defense
  • January 5, 2023
  • Comments Off on ராணுவம் சார்ந்த லித்தியம் ஐயான் பேட்டரி தயாரிக்க இணைந்த இந்தியா மற்றும் ஜப்பான் !!

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ராணுவ பயன்பாட்டிற்கான லித்தியம் ஐயான் Lithium Ion பேட்டரிகளை தயாரிக்க இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான BEL Bharat Electronics Limited பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனமான TOSHIBA டோஷிபா ஆகியவை இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளன.

ராணுவ பயன்பாட்டு பேட்டரிகளை இந்த நிறுவனங்கள் உருவாக்கும் எனவும் ஆனால் எந்தெந்த ஆயுதங்களில் இவை பயன்படுத்தப்படும் என்பது தெரியவில்லை என கூறப்படுகிறது.

அனேகமாக தற்போது வழக்கத்தில் உள்ள Lead Acid பேட்டரிகளை பயன்படுத்தும் பல்வேறு ஏவுகணைகளில் Lithium Ion பேட்டரிகளை பயன்படுத்தலாம் எனவும் இதன் காரணமாக எடை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லெட் ஆசிட் பேட்டரி வைக்கும் இடத்தில் இரண்டு லித்தியம் ஐயான் பேட்டரிகளை வைக்க முடியும் மேலும் லித்தியம் ஐயான் பேட்டரிகள் அதிக சக்தியை அளிப்பவை என்பதும் இன்று உலகில் இவை தான் முன்னனியில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.