இந்திய அரசுசார்ந்த ஆய்வகமான NMRL – Naval Materials Research Labaratory எனப்படும் கடற்படை உலோகவியல் ஆய்வகமும், கல்வரி (Scorpene ஸ்கார்பீன்) நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் ஃபிரான்ஸை சேர்ந்த Naval Group நிறுவனமும் ஒரு முக்கிய திட்டத்தில் கைகோர்த்துள்ளன.
அதாவது நமது கல்வரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் AIP – Air Independent Propulsion எனப்படும் தொழில்நுட்ப அமைப்பை சோதனை செய்து இணைப்பதற்கான திட்டம் தான் அது, NMRL ஆய்வகம் இந்தியாவிலேயே உருவாக்கியுள்ள மேற்குறிப்பிட்ட அமைப்பை Naval Group ஆய்வு செய்து தர சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இந்த AIP அமைப்பு இல்லாத நீர்மூழ்கி கப்பல்கள் நீர்பனப்பிற்கு மேலே வந்த தேவையான ஆக்ஸிஜனை எடுத்து கொள்ள வேண்டும் இதனால் அடிக்கடி மேலே வர வேண்டும் அப்படி வரும்போது எதிரிகளிடம் சிக்கி தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகவே தான் இந்த அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அமைப்பு உள்ள நீர்மூழ்கி கப்பல்கள் மிகவும் நீண்ட காலம் கடலுக்குள்ளேயே பயணிக்க முடியும், தற்போது கல்வரி ரக கப்பல்கள் 24 மணி நேரம் மட்டுமே கடலுக்குள் இருக்க முடியும் இனி இது 14 முதல் 21 நாட்களாக அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கடற்படை தனது ஆறு கல்வரி நீர்மூழ்கி கப்பல்களிலும் இந்த அமைப்புகளை பொருத்த முடிவு செய்துள்ளது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதற்கான பணிகள் துவங்கும் Larsen & Toubro லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தான் இந்த AIP அமைப்புகளை தயாரித்த வழங்க உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.