தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், ஜப்பானில் இந்திய விமானப்படைக்கு அமோக வரவேற்பு !!
1 min read

தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், ஜப்பானில் இந்திய விமானப்படைக்கு அமோக வரவேற்பு !!

ஜப்பானில் நடைபெற உள்ள Exercise Veer Guardian எனும் இருதரப்பு விமானப்படை கூட்டு பயிற்சிக்காக இந்திய விமானப்படையின் சுகோய்-30 Su-30 MKI போர் விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றன.

ஜப்பான் செல்லும் வழியில் முதலாவதாக தாய்லாந்து சென்ற போது இந்திய விமானப்படைக்கு தாய்லாந்து விமானப்படை மற்றும் தாய்லாந்து கடற்படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, மேலும் அந்நாட்டுக்கான இந்திய தூதர் நாகேஷ் சிங் இந்திய படையினரை வரவேற்றார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஃபிலிப்பைன்ஸ் சென்ற இந்திய விமானப்படையினருக்கு அந்நாட்டு விமானப்படை சார்பில் சிறப்ப வரவேற்பு அளிக்கப்பட்டது, அப்போது இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் இந்திய படையினரை வரவேற்றார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஜப்பான் சென்றடைந்த போது இந்திய விமானங்கள் தண்ணீர் பீய்ச்சி மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, ஜப்பானிய விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர சிபி ஜார்ஜ் இந்திய படையினரை வரவேற்றனர்.

மேலும் ஜப்பானிய விமானப்படை இந்த நிகழ்வை தனது அதிகாரப்பூர்வ Youtube பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது அதனை ஏராளமான ஜப்பானியர்கள் கண்டு களித்ததும் கூடுதல் சிறப்பு ஆகும்.