1 min read
Tiltrotor வானூர்தி தயாரிக்க விரும்பும் இந்தியா !!
இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் Tiltrotor வானூர்திகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது இதற்கான பணிகளை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகை வானூர்திகள் தற்போது அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளன, வானூர்தி வடிவமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த வகை வானூர்திகளால் ஹெலிகாப்டர்களை போல் செங்குத்தாக தரை இறங்கவும் மேல் எழும்பவும் முடியும் அதே நேரத்தில் விமானங்களை போல் பறக்கவும் முடியும்.
இவற்றின் பிரத்தியேக சிறப்பம்சம் என்னவென்றால் ஹெலிகாப்டர்களை விட வேகமாக அதிக தொலைவுக்கு பறக்க முடியும் ஆகவே எதிர்காலத்தில் ஹெலிகாப்டர்களின் பயன்பாடு குறையும் அதற்கு இந்தியா இப்போதே தயாராகிறது என்றால் மிகையல்ல.