இந்தியாவுக்கு மேலும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிகளை விற்க முனையும் ஃபிரான்ஸ் !!

ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் எம்மானுவேல் மேக்ரான் அவர்களுக்கான ராஜாங்க ஆலோசகரான எம்மானுவேல் பான் இந்தியாவில் நடைபெற்று வரும் 36ஆவது இந்திய ஃபிரான்ஸ் முலோபாய கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்துள்ளார்.

இந்த பயணத்தின் போது அவர் இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று கல்வரி ரக (ஃபிரான்ஸில் ஸ்கார்பீன்) டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இந்த ரகத்தை சேர்ந்த ஆறு கப்பல்களை இந்தியாவிலேயே கட்டமைத்து அவற்றில் ஐந்து படையில் இணைக்கப்பட்டும் கடைசி கப்பல் இந்த ஆண்டு படையில் இணைக்கப்பட உள்ள நிலையில் ஃபிரான்ஸ் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் கட்டமைத்த மும்பை MDL Mazagon Docks Limited மஸகான் கப்பல் கட்டுமான தளமும் இத்தகைய மேலும் மூன்று கப்பல்களை கட்டி தர முன்வந்துள்ளது ஆகவே இந்திய கடற்படை அதற்கான ஆர்டரை தருமாறு வலியுறுத்தி வருகிறது.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியா P-75 I (Project 75 India) எனும் திட்டத்தின் கீழ் ஆறு அடுத்த தலைமுறை டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் திட்டத்தில் இருந்து ஃபிரான்ஸ் இப்படி ஒரு நீர்மூழ்கி உலகிலேயே இல்லை என கூறி பின்வாங்கியது கூடுதல் தகவல் ஆகும்.