இந்தியாவுக்கு தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கான தொழில்நுட்பம் தர தயார் : ஃபிரான்ஸ் !!
1 min read

இந்தியாவுக்கு தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கான தொழில்நுட்பம் தர தயார் : ஃபிரான்ஸ் !!

இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் எம்மானுவேல் லெனாய்ன் சமீபத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது இந்தியாவுக்கு பல்வேறு ராணுவ தொழில்நுட்பங்களை தர ஃபிரான்ஸ் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

உதாரணமாக போர் விமானங்கள், ஜெட் என்ஜின், அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவை இந்த பட்டியலில் அடக்கம் மேலும் பேசும்போது இந்திய கடற்படையின் Project 75 Alpha (P – 75A) திட்டத்தின் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட தொழில்நுட்பம் தந்துதவ விரும்புவதாகவும் கூறினார்.

மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் இந்திய அரசு சுமார் 95% இந்திய பாகங்கள் மற்றும் 190 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் அணு உலை கொண்ட 6000 டன்கள் எடை கொண்ட தலா ஆறு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவிலேயே கட்டுவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.

தற்போது இந்த திட்டத்தின் நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு தான் ஃபிரான்ஸ் தனது பாரகுடா அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கு வடிவமைத்து வைத்திருந்த டீசல் எலெக்ட்ரிக் என்ஜின் கொண்ட தொழில்நுட்பத்தை தர விரும்புவதாக ஃபிரான்ஸ் கூறியுள்ளது, இதில் இந்தியா என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபிரான்ஸ் இதே தொழில்நுட்பம் கொண்ட தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க முன்வந்த போது தான் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்ட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உதவியுடன் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்ட முடிவு செய்தது கூடுதல் தகவல் ஆகும்.