விரைவில் முதல் தொகுதி இலகுரக ஹெலிகாப்டர்கள் டெலிவரி !!

  • Tamil Defense
  • January 21, 2023
  • Comments Off on விரைவில் முதல் தொகுதி இலகுரக ஹெலிகாப்டர்கள் டெலிவரி !!

இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை ஆகியவற்றுக்கு தலா 2 வீதம் முதல் நான்கு இலகுரக ஹெலிகாப்டர்கள் LUH – Light Utility Helicopter ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL – Hindustan Aeronautics Limited நிறுவனத்தால் டெலிவரி செய்யப்பட உள்ளன.

LRIP – Low Rate Initial Production முறையில் இந்த நான்கு ஹெலிகாப்டர்களும் தயாரிக்கப்பட்டு உள்ளன, இனியும் இதே போல எட்டு ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் அவை தலா நான்கு வீதம் இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைக்கு பிரித்து வழங்கப்படும் என கூறப்படுகிறது.

1970களின் மத்தியில் ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட சீட்டா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இவை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது சிறப்பம்சம் ஆகும்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் முப்படைகள், கடலோர காவல் படை மற்றும் துணை ராணுவப்படைகளுக்கு இத்தகைய 500 ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது,

இந்த தேவையை பூர்த்தி செய்ய கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள HAL தொழிற்சாலை தற்போது ஆண்டுக்கு 30 ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் எதிர்காலத்தில் இந்த திறன் ஆண்டுக்கு 60 என்றளவுக்கு உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.