
பாகிஸ்தான், சீனா, பூட்டான் மற்றும் நேபாளம் உடனான இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை மற்றும் சஷாஸ்திர சீமா பல் போன்ற துணை ராணுவ படைகளை மேலும் நவீனபடுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக தற்போது எல்லையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த மின்சார பைக்குகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, இவை Adventure அதாவது Off-Road பைக்குகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இத்தகைய பைக்குகளை சிறிய அளவில் வாங்கி எல்லையோரத்தில் பயன்படுத்தி கள சோதனைகளை மேற்கொள்ளவும் தொடர்ந்து குறைகளை களைந்து மிகப்பெரிய அளவில் இத்தகைய பைக்குகளை வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகளாவிய ரீதியில் பல ராணுவங்கள் மற்றும் துணை ராணுவ படைகள் இத்தகைய இலகுரக மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது கூடுதல் தகவல் ஆகும்.