இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஆர்வம் காட்டும் எகிப்து !!

  • Tamil Defense
  • January 23, 2023
  • Comments Off on இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஆர்வம் காட்டும் எகிப்து !!

WION ஊடகம் எகிப்து இந்தியா சொந்தமாக தயாரித்த ஆகாஷ் Akash Mk-1, Akash NG (Next Generation) அடுத்த தலைமுறை ஆகாஷ் அமைப்புகள் மீதும் DRDO தயாரித்த SAAW – Smart Anti Airfield Weapon எனப்படும் அதிநவீன குண்டின் மீதும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் கடந்த வாரம் எகிப்து இந்தியாவின் Pralay TBM – Tactical Ballistic Missile எனப்படும் குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் அடிப்படையில் எகிப்திலேயே தயாரித்து பயன்படுத்த விரும்புவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இப்படியிருக்க சமீபத்தில் இந்தியா ஆஃபர் செய்த தேஜாஸ் மார்க் – 1 (Tejas Mk-1 LIFT) பயிற்சி விமானங்களை நிராகரித்து விட்டு கொரிய KAI – 50 பயிற்சி விமானத்தை எகிப்து தேர்வு செய்தது கூடுதல் தகவல் ஆகும்.

எது எப்படியோ அடுத்த வாரம் எகிப்து அதிபர் அல் சிசி இந்தியா வரும்போது இருதரப்பு ராணுவ உறவில் நிச்சயமாக முன்னேற்றம் உண்டாக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.