இந்திய தேஜாஸை புறக்கணிக்கும் எகிப்து !!

  • Tamil Defense
  • January 22, 2023
  • Comments Off on இந்திய தேஜாஸை புறக்கணிக்கும் எகிப்து !!

சர்வதேச புகழ்பெற்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ஜேன்ஸ் Janes International வெளியிட்டுள்ள அறிக்கையில் எகிப்து இந்தியாவின் தேஜாஸை நிராகரிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

எகிப்திய அரசு பொதுத்துறை நிறுவனமான AOI – Arab Organization for Industrialisation தென்கொரியாவின் பொதுத்துறை நிறுவனமான KAI Korean Aerospace Industries உடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஒரு அதிநவீன பயிற்சி விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான ஒப்பந்தமாகும் ஆனால் இதை பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகிப்து தன்னிடம் உள்ள தனது 100 பழைய Alpha Jet மற்றும் K-8 ஆகிய பயிற்சி விமானங்களை மாற்ற நினைக்கிறது இதில் 70 விமானங்கள் எகிப்திலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

இந்தியா தனது தேஜாஸ் பயிற்சி விமானத்தை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் எகிப்தில் தயாரிக்க ஆஃபர் செய்த நிலையில் எகிப்து கொரிய விமானத்தை தேர்வு செய்துள்ளது, மலேசிய விமானப்படை ஒப்பந்தத்திலும் தென் கொரியாவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் Yak – 130, இத்தாலியின் Leonardo M-346 மற்றும் செக் குடியரசின் Aero Vodochody L – 39NG போன்ற விமானங்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.