இந்தியாவுக்கு ராணுவ போக்குவரத்து விமானம் விற்க முனையும் பிரேசில் !!

பிரேசில் நாட்டை சேர்ந்த முன்னனி வானூர்தி தயாரிப்பு நிறுவனமான Embraer எம்ப்ரேர் இந்திய விமானப்படைக்கு தனது C-390 ராணுவ போக்குவரத்து விமானத்தை விற்க தீவிரமாக முயன்று வருகிறது.

இது தொடர்பாக Embraer மற்றும் HAL ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த விமானத்தை இந்திய விமானப்படைக்கு ஆஃபர் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகை விமானங்கள் நடுத்தர போக்குவரத்து ரகத்தை சேர்ந்தவையாகும், இவற்றை இந்திய விமானப்படை வடக்கு எல்லையோரம் மிக சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ள முடியும் என எம்ப்ரேர் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது இந்திய விமானப்படையின் நடுத்தர ராணுவ போக்குவரத்து விமானங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் ஆர்டரை பெற Embraer மற்றும் Airbus ஆகிய நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.