பிரேசில் நாட்டை சேர்ந்த உலகின் முன்னனி வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான Embraer எம்ப்ரேர் தனது A-29 Super Tuscano விமானத்தை இந்தியாவுக்கு விற்க முன்வந்துள்ளது.
இந்த விமானத்தை இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை, இந்தோ திபெத் எல்லை காவல்படை, எல்லை பாதுகாப்பு படை ஆகியவை பயன்படுத்தி தரை பாதுகாப்பு, கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் 113 மற்றும் 236 கிலோ எடையிலான லேசர் வழிகாட்டப்பட்ட குண்டுகள், AGR – 20 துல்லிய தாக்குதல் அமைப்பு, இயந்திர துப்பாக்கி மற்றும் பல ஆயுதங்கள் இருக்கும்.
இந்த விமானம் உலகின் மிகச்சிறிய மற்றும் மிக இலகுவான போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.