அர்மீனியாவுக்கு இந்தியா ஆயுதங்களை விற்பனை செய்வது மோசமான செயல் : அஸர்பெய்ஜான் !!
அஸர்பெய்ஜான் மற்றும் அர்மீனியா இடையே போர் நடைபெற்றதும் அதில் அஸர்பெய்ஜான் இஸ்ரேலிய மற்றும் துருக்கி ஆயுதங்களை பயன்படுத்தி அர்மீனியாவுக்கு சொந்தமான சில பகுதிகளை கைபற்றியதும் உலகறிந்த விஷயம்.
இதை தொடர்ந்து அர்மீனியா இந்தியாவிடம் இருந்து SWATHI WLR – Weapon Locating Radar, PINAKA MBRL – Multi Barrel Rocket Launcher, 155mm 39 cal MArG பிரங்கிகள் போன்றவற்றை வாங்கியது.
அஸர்பெய்ஜான் பாதுகாப்பு நிபுணர்கள் இந்திய ஆயுதங்கள் தரமானவை அல்ல விமர்சனம் வைத்த நிலையிலும் கூட அர்மீனியா இந்திய ஆயுதங்களின் தரத்தை அறிந்து மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டது, மேலும் தனது சுகோய் -30 Su-30 விமானங்களில் இந்திய தயாரிப்பு ASTRA ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை இணைக்க திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அஸர்பெய்ஜான் அதிபர் இல்ஹாம் அலியெவ் அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகமான Azeri News நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட போது நிருபர் அர்மீனியா இந்திய ஆயுதங்களை வாங்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க
அதற்கு பதிலாக “இந்தியா அர்மீனியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது நட்புறவை சிதைக்கும் செயல் காரணம் இந்தியா தற்காப்பு ஆயுதங்களை அல்ல தாக்குதல் ஆயுதங்களை வழங்கி இருக்கிறது அவற்றை அஸர்பெய்ஜானுக்கு எதிராக பயன்படுத்துவர் என்பதில் சந்தேகமில்லை
எது எப்படியோ அஸர்பெய்ஜானுக்கு ஆபத்து உள்நாட்டிலோ அல்லது எல்லைக்கு அப்பால் இருந்தாலும் கூட அவற்றை அடையாளம் கண்டு நிச்சயமாக தாக்கி அழிப்போம் என கூறினார்
அஸர்பெய்ஜான் காலம் காலமாக இஸ்லாமிய நாடு எனும் அடிப்படையில் பாகிஸ்தானுடன் நட்புறவை பேணி வருகிறது மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுடனேயே எப்போதும் சர்வதேச அரங்கில் செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.