தனது சுகோய் விமானங்களை நவீனபடுத்த இந்திய உதவியை நாடும் அர்மீனியா !!
அர்மீனியா தனது விமானப்படையின் வசம் உள்ள சுகோய் போர் விமானங்களை நவீனபடுத்த இந்திய உதவியை நாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பொதுவாகவே அர்மீனியா விமானப்படையின் Su-30 SM விமானங்கள் வெள்ளை யானை என அழைக்கப்படுகின்றன காரணம் இதற்கு காரணம் இவற்றால் பயன் குறைவு ஆனால் செலவு அதிகம்.
மேலும் அர்மீனியா அஸர்பெய்ஜான் இடையே நடைபெற்ற போரில் இவை பயன்படுத்தப்படவில்லை இதற்கு காரணம் ராக்கெட்டுகளை தவிர இவற்றிற்கான அதிநவீன ஆயுதங்கள் இல்லை மேலும் விமானிகளுக்கு போதுமான பயிற்சியும் இல்லை.
இதன் காரணமாக அஸர்பெய்ஜான் விமானப்படையின் Su-25 போர் விமானங்கள் மற்றும் Bayratkar TB-2 ஆளில்லா விமானங்கள் அர்மீனிய படைகள் மீது தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தின.
தற்போது இந்த விமானங்களை நவீனபடுத்தவும், அவற்றிற்கான பல்வேறு ஆயுதங்களை வாங்கவும், விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும் அர்மீனியா இந்திய உதவியை நாடி உள்ளதாக அர்மீனியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான காரணமாக ஏற்கனவே இந்தியா மிகவும் வெற்றிகரமாக Su-30 விமானங்கள் பயன்படுத்தி வருவதும் ரஷ்ய சுகோய் விமானங்களை விடவும் நவீனமாக வைத்திருப்பதுமே ஆகும் என கூறப்படுகிறது மேலும் ஏற்கனவே அர்மீனியா இந்திய ஆயுதங்களை வாங்கி உள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.