தேஜாஸை சோதனை செய்ய இந்தியா வரும் அர்ஜென்டினா குழு !!

விரைவில் அர்ஜென்டினா குழு ஒன்று இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை சோதனை செய்ய இந்தியா வர உள்ளதாக தகவல்கள் கசிந்து பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குழுவில் அர்ஜென்டினா விமானப்படையின் தலைசிறந்த போர் விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருப்பர் இவர்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ள Aero India 2023 ஏரோ இந்தியா வானூர்தி கண்காட்சியில் கலந்து கொள்வர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்த அர்ஜென்டினா குழுவினருக்கு இந்தியா உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் LUH, LCH Prachand ப்ரச்சந்த் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் மற்றும் LCA Tejas Mk1 இலகுரக தேஜாஸ் போர் விமானம் ஆகியவை காண்பிக்கப்பட்டன.

இந்தியா அர்ஜென்டினாவுக்கு பிரிட்டிஷ் அமைப்புகள் இல்லாத வானூர்திகளை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ள நிலையில் அதை எப்படி இந்தியா செய்ய திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விளக்கமும் இந்த பயணத்தின் போது அளிக்கப்படும் என கூறப்படுகிறது.