அடுத்து ஆண்டு இந்திய தரைப்படைக்கு 6 அபாச்சி ஹெலிகாப்டர்கள் டெலிவரி !!

அடுத்த ஆண்டு ஃபெப்ரவரி வாக்கில் இந்திய தரைப்படைக்கு முதலாவது Boeing AH – 64E தாக்குதல் ஹெலிகாப்டர் டெலிவரி செய்யப்பட உள்ளதாகவும் ஏப்ரல் 2024 வாக்கில் ஆறு அபாச்சிகளும் டெலிவரி செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தரைப்படையின் AAC – Army Aviation Corps எனப்படும் வான்படை பிரிவு இவற்றை பயன்படுத்த உள்ள நிலையில் இந்திய விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டர்களில் இருந்து தனித்து தெரியும் வகையில் இவற்றிற்கு பாலைவன மணல் நிற வண்ணப்பூச்சை கொடுக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த வண்ணப்பூச்சு பெரும்பாலும் இவை பாகிஸ்தான் உடனான எல்லையோரம் பயன்படுத்தப்படும் என்பதை சுட்டி காட்டுவதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான்கு தரைப்படை விமானிகள் போயிங் நிறுவனத்தில் அபாச்சி ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சிகளை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது.

இந்திய தரைப்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிற்கு 39 அபாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது அதாவது விமானப்படை ஏற்கனவே 22 அபாச்சி ஹெலிகாப்டர்களை பெற்றுவிட்டது தரைப்படைக்கு 17 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.