Day: January 12, 2023

போர் கப்பல்களில் அதிநவீன பயங்கர ஆயுதத்தை இணைக்க கடற்படை திட்டம் !!

January 12, 2023

நமது நாட்டின் DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்த SMART – Supersonic Missile Assisted Torpedo எனும் ஆயுதத்தை போர் கப்பல்களில் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆயுதம் அடிப்படையில் நீரடிகணையாகும் இதை ராக்கெட் வடிவத்தில் உருவாக்கி உள்ளனர், அதாவது சூப்பர்சானிக் வேகத்தில் பயணிக்கும் ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் இலக்கை நெருங்கியவுடன் ராக்கெட்டிடம் இருந்து பாராசூட் மூலம் பிரிந்து கடலுக்குள் சென்று பயணித்து எதிரி […]

Read More

துணை ராணுவ படைகளுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு !!

January 12, 2023

கடந்த 2004ஆம் ஆண்டு முப்படைகளை தவிர துணை ராணுவம் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அரசு வழங்கி வந்த ஒய்வூதியம் ரத்து செய்யப்பட்டு NPS National Pension Scheme எனும் புதிய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஒய்வூதியத்திற்கு அரசு பணியாளர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையையும் பின்னர் மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையையும் பங்களிப்பு செய்து வரும் தொகை ஒய்வு பெறுகையில் வழங்கப்படும். இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே துணை ராணுவ […]

Read More

காஷ்மீரில் ராணுவத்தை குறைக்க மத்திய அரசு திட்டம் !!

January 12, 2023

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு தற்போது மீண்டும் காஷ்மீர் சார்ந்த பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குவிக்கப்பட்டு இருக்கும் ராணுவ வீரர்களை அதாவது ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையினரின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக துணை ராணுவ படைகளின் எண்ணிக்கையை காஷ்மீரில் அதிகரிக்கும் வகையில் அவர்களை குவிக்க உள்ளதாகவும் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் […]

Read More

தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், ஜப்பானில் இந்திய விமானப்படைக்கு அமோக வரவேற்பு !!

January 12, 2023

ஜப்பானில் நடைபெற உள்ள Exercise Veer Guardian எனும் இருதரப்பு விமானப்படை கூட்டு பயிற்சிக்காக இந்திய விமானப்படையின் சுகோய்-30 Su-30 MKI போர் விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றன. ஜப்பான் செல்லும் வழியில் முதலாவதாக தாய்லாந்து சென்ற போது இந்திய விமானப்படைக்கு தாய்லாந்து விமானப்படை மற்றும் தாய்லாந்து கடற்படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, மேலும் அந்நாட்டுக்கான இந்திய தூதர் நாகேஷ் சிங் இந்திய படையினரை வரவேற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஃபிலிப்பைன்ஸ் சென்ற இந்திய […]

Read More