உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விருப்பம் ரஷ்ய அதிபர் !!

  • Tamil Defense
  • December 30, 2022
  • Comments Off on உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விருப்பம் ரஷ்ய அதிபர் !!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா விரும்புவதாக கூறி உள்ளது உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர் கூறுகையில் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து கொண்டு இருப்பதில் எங்களுக்கு நாட்டமில்லை விரைவில் இதற்கு முடிவு காண விரும்புகிறோம் இதற்கு பேச்சுவார்த்தையும் ஒரு வழி என கூறியுள்ளார்.

அமெரிக்க அரசோ ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் பைடன் தயாராக உள்ளதாகவும் ஆனால் புடின் உண்மையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும்

அவரது பேச்சுக்கும் செயல்களுக்கும் சம்பந்தமில்லை எனவும் உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து வான்வழியாகவும் தரை வழியாகவும் நடத்தி வரும் தாக்குதல்கள் இதற்கு உதாரணம் எனவும் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அரசு கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு மேலும் உதவி செய்ய நேரம் பெற்று தரும் நோக்கத்தில் தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக குற்றம்சாட்டி உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.