லாரியில் பொருத்தப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனைக்கு தயார் !!
DRDO Defence Reaserch and Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த VL – SRSAM Vertically Launched Short Range Surface to Air Missile மற்றுமொரு சோதனைக்கு தயாராகி உள்ளது.
அதாவது இந்த முறை ஒரு 8×2 லாரியில் மேற்குறிப்பிட்ட வான் பாதுகாப்பு அமைப்பை பொருத்தி சோதனை செய்ய உள்ளனர், இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகை ஏவுகணைகள் செங்குத்தாக புறப்பட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள், துல்லிய தாக்குதல் குண்டுகள் ஆகியவற்றை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டவையாகும்.
இந்த வகை வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்திய கடற்படையின் முன்னனி போர் கப்பல்களில் உள்ள பழைய பராக் Barak – 1 வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு மாற்றாக உருவாக்கினர்.
தற்போது இந்திய விமானப்படை லாரியில் பொருத்தப்பட்ட இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆகாஷ் அமைப்புடன் சேர்த்து களமிறக்கி தனது தளங்கள், S- 400 அமைப்புகள் மற்றும் MRSAM Medium Range Surface to Air Missile இடைத்தூர வான் பாதுகாப்பு அமைப்புகளை பாதுகாக்கும் நோக்கில் பயன்படுத்த விரும்புவது குறிப்பிடத்தக்கது ஆகும்.