ரஷ்யாவில் இருந்து இறக்குமதியை அதிகரித்த அமெரிக்கா !!

  • Tamil Defense
  • December 7, 2022
  • Comments Off on ரஷ்யாவில் இருந்து இறக்குமதியை அதிகரித்த அமெரிக்கா !!

ரஷ்ய பொருளாதாரத்தை நசுக்கும் எண்ணத்தோடு அமெரிக்கா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது, மேலும் இந்தியா உட்பட பல உலக நாடுகளை ரஷ்யா உடனான அனைத்து இறக்குமதி தொடர்புகளையும் துண்டிக்க மிரட்டியும் வற்புறுத்தியும் வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வது அதிகரகத்துள்ள செய்தியும் வெளியாகி உள்ளது அதாவது கடந்த ஆண்டு 1947 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதி தற்போது 1959 மில்லியன் டாலர்கள் என உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் ரஷ்யாவுக்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது கடந்த ஆண்டு 387 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த ஏற்றுமதி மதிப்பானது இந்த ஆண்டு 396 மில்லியன் டாலர்கள் எனும் அளவை தொட்டுள்ளது, இதற்கு முன்னர் அமெரிக்கா அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி தடை பட்டியலில் இருந்து சேர்க்காமல் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.