பாகிஸ்தான் தாலிபான்கள், அல்-காய்தா கிளை அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த அமெரிக்கா !!

  • Tamil Defense
  • December 6, 2022
  • Comments Off on பாகிஸ்தான் தாலிபான்கள், அல்-காய்தா கிளை அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த அமெரிக்கா !!

அமெரிக்க அரசு பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் (TTP Tehrik e Taliban Pakistan) மற்றும் அல்காய்தாவின் பாகிஸ்தான் கிளையான AQIS Al Qaeda Indian Subcontinent போன்ற அமைப்புகளை உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி இதன் காரணமாக இந்த அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்கள் மற்றும் நபர்கள் மீது அமெரிக்க நடவடிக்கைகள் பாயும், மேலும் உலகளாவிய ரீதியிலும் இந்த நடவடிக்கைகளை நட்பு நாடுகள் மூலமாக எடுக்க கூடும்.

இதை தவிர அமெரிக்காவை சேர்ந்தவர்கள் இந்த அமைப்புகளுடன் தொடர்பில் இருக்க கூடாது எனவும் இந்த இரண்டு அமைப்புகளை சேர்ந்த நால்வர் மீது அமெரிக்க பார்வை திரும்பி உள்ளது அவர்களின் பெயரும் அமெரிக்க அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் தாலிபான்களின் தலைவன் காரி அம்ஜாத், அல் காய்தா கிளையின் தலைவன் ஒசாமா மெஹ்மூத், துணை தலைவன் யாஹ்யா கவ்ரி மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை கவனித்து வந்த முஹம்மது மாரூஃப் போன்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.