கடற்படை போர் விமானத்திற்கும் ஆளில்லா போர் விமானம் !!

இந்திய விமானப்படைக்கென HAL நிறுவனம் தயாரித்து வரும் Loyal Wingman எனப்படும் ஆளில்லா போர் விமானத்தில் இந்திய கடற்படையும் அதீத ஆர்வம் காட்டி வருகிறது, ஆகவே எதிர்காலத்தில் தங்களுக்கும் ஆளில்லா போர் விமானம் வேண்டுமென விரும்புகிறது.

இந்திய கடற்படையின் மூத்த போர் விமானிகள் எதிர்காலம் மனிதர்கள் மற்றும் ஆளில்லா போர் விமானங்களின் காலமாக இருக்கும் எனவும் கூட்டாக மனிதர்களும் இயந்திரங்களும் செயல்பட வேண்டிய நிலை இருக்கும் எனவும் நம்புகின்றனர்.

தற்போது இந்திய கடற்படை பொறுமையுடன் இந்த ஆளில்லா போர் விமான திட்டத்தை கவனித்து வருகிறது முக்கால்வாசி தயாரானதும் அடுத்தகட்டமாக அந்த விமானத்தை இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இறங்குவதற்கு தோதுவாக மாற்றியமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த விமானம் பல்வேறு மாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கும் குறிப்பாக வலுவான அடிப்பகுதி, மடக்கக்கூடிய இறக்கைகள், கொக்கி போன்ற பல்வேறு அமைப்புகள் மற்றும் எதிர்காற்று மோசமான கடல்பரப்பு வானிலை ஆகியவற்றை சமாளிக்கும் ஆற்றலும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.