2023ல் வெளிவரும் இந்தியாவின் டாப் -5 ஆயுதங்கள் !!

  • Tamil Defense
  • December 31, 2022
  • Comments Off on 2023ல் வெளிவரும் இந்தியாவின் டாப் -5 ஆயுதங்கள் !!

இந்த ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த ஆண்டு இந்தியா உலகிற்கு ஐந்து முக்கிய ஆயுத அமைப்புகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது, தற்போது அவற்றை பற்றி பார்க்கலாம்.

ALFA – S : Air Launched Flexible Asset எனப்படும் இந்த அமைப்பானது தன்னகத்தே நான்கு மிதவை குண்டுகளை கொண்டிருக்கும், போர் விமானத்தில் இருந்து இந்த அமைப்பை ஏவும் விமானி அதற்குள் இருக்கும் மிதவை குண்டுகளை இலக்குகளை நோக்கி செலுத்த முடியும். இதனை NSRT எனும் தனியார் நிறுவனம் மற்றும் HAL ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

2) NAG MK – 2 : இது ஏற்கனவே உள்ள NAG டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும், இந்த புதிய ஏவுகணை HELINA மற்றும் SANT ஏவுகணைகளில் உள்ள பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பெறும் எனவும் மேலும் இதன் தாக்குதல் வரம்பு திறன் ஆகியவை அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது, இதனை DRDO தயாரித்து வருகிறது.

ZORAWAR Light Tank : ஸோராவர் இலகுரக டாங்கியானது DRDO மற்றும் L & T என பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பில் உருவாகி வருகிறது, அடுத்த ஆண்டு இறுதியில் முதலாவது சோதனை டாங்கி வெளிவரும் எனவும் 2024ஆம் ஆண்டு சோதனைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

S4* : S4 Star எனப்படும் இந்த அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் தற்போது கட்டுமானத்தில் உள்ளது, இதனுடைய கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை (80%) அடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு பல்வேறு முக்கிய கருவிகள் பொருத்தப்பட உள்ளதாகவும் 2025ஆம் ஆண்டு நீர் சார்ந்த சோதனைகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tejas Mk-2: இது தற்போதைய Tejas Mk-1 விமானத்தை விடவும் அளவில் பெரியது, தற்போது ஒரு வருட தாமதம் ஏற்பட்டு உள்ள நிலையில் HAL இன்னமும் 2023ல் முதல் விமானத்தை அறிமுகப்படுத்தும் காலக்கெடுவை மாற்றவில்லை ஆகவே இதன் முன்னேற்றத்தை அடுத்த ஆண்டு வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.