இந்தியாவில் Gripen E போர் விமானத்தை உருவாக்க கூட்டாளிகளை தேடும் சுவீடன் !!
சுவீடன் நாட்டை சேர்ந்த போர் விமானம் மற்றும் வானூர்தி தயாரிப்பு நிறுவனமான SAAB இந்தியாவிலேயே Gripen – E போர் விமானத்தை தயாரிக்க தொழில்துறை கூட்டாளிகளை தேடி வருகிறது.
SAAB நிறுவனமானது இந்திய விமானப்படைக்கான 114 போர் விமானங்களை வாங்குவதற்கான MRFA Multi Role Fighter Aircraft பல திறன் போர் விமான திட்டத்தை குறிவைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mahindra Defense, VEM Technologies உள்ளிட்ட சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் தங்களது ஆர்வத்தை வெளிபடுத்தி உள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது விரைவில் அதாவது அடுத்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் 13 – 17 வரை பெங்களூர் ஏலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் கையெழுத்து ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படை வருகிற 2023 இறுதியில் அல்லது 2024 ஆரம்பத்தில் MRFA திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் 2025ஆம் ஆண்டு தனக்கு தேவையான போர் விமானத்தை தேர்வு செய்து அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுவது கூடுதல் தகவலாகும்.