பெற்றோரிடம் பொய் சொல்லி ஐஐடியை உதறிவிட்டு ராணுவத்தில் இணைந்த இளைஞர் !!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஜஜோர பாஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் கவுரவ் யாதவ் இவரது தந்தை விவசாயி ஆவார் இவர் பெற்றோரிடம் பொய் சொல்லி ராணுவத்தில் இணைந்துள்ளார்.
இவர் ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள கேரளா பொது பள்ளியில் பயின்ற அவர் படிப்பு மற்றும் விளையாட்டில் மிகவும் சிறந்த மாணவராக இருந்துள்ளார், 10ஆம் வகுப்பில் ஏ கிரேடு மற்றும் 12ஆம் வகுப்பில் 96% மதிப்பெண் பெற்றுள்ளார்.
பின்னர் IIT ஐஐடியில் இணைவதற்கு நுழைவு தேர்வு எழுதினார் அதில் தேர்ச்சியும் பெற்ற நிலையில் தனது கனவான ராணுவத்தில் இணைவதற்காக தனது பெற்றோரிடம் தேர்ச்சி அடையவில்லை என பொய் சொல்லி விட்டு தில்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்தார்.
அங்கு பயின்று கொண்டே NDA National Defence Academy எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைவதற்கு நுழைவு தேர்வு எழுதினார் அதில் இரண்டு முறை வெற்றி பெற்று SSB எனப்படும் நேர்மூக தேர்விற்கு சென்று தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது முறை வெற்றி பெற்று அகாடமியில் இணைந்தார்.
தற்போது இவர் பயிற்சி பெற்ற 145ஆவது பயிற்சி பிரிவின் பயிற்சி நிறைவு விழா பூனேயில் உள்ள அகாடமியில் நடைபெற்றது அதில் சிறந்த முறையில் பயிற்சி நிறைவு செய்த காரணத்தால் ஜனாதிபதியின் தங்க பதக்கத்தை இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் அவர்களிடம் இருந்து பெற்று கொண்டார்.
இனி உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரில் உள்ள இந்திய தரைப்படையின் பயிற்சி மையமான இந்திய ராணுவ அகாடமியில் இணைந்து ஒரு ஆண்டுக்கு தரைப்படை சார்ந்த பயிற்சிகளை பெற்று லெஃப்டினன்ட் அந்தஸ்து அதிகாரியாக சேவையில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.